நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா
ADDED :4581 days ago
நிலக்கோட்டை: நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா வரும் செவ்வாய் அன்று துவங்குகிறது.இதற்காக கடந்த சில நாட்களாக, பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். கடந்த திங்கள் முதல் அம்மன் கோயிலில் ராஜராஜேஸ்வரி, பத்ரகாளியம்மன், மீனாட்சி, வீணையுடன் சரஸ்வதி, மகாலட்சுமி அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இன்று தவழும் கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். தொடர்ந்து சிம்ம, ரிஷப வாகனத்தில் வீதி உலா வருகிறார். வரும் புதனன்று, பூப்பல்லக்கில் நகர் வலம் நடக்கிறது. மார்ச் 28(வியாழன்) மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைகிறார். இந்து நாடார் உறவின்முறையினர், இளைஞர் அணியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.