உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரோக்கிய உடல்நிலைக்கு விஷ்ணு சகஸ்ரநாமம்!

ஆரோக்கிய உடல்நிலைக்கு விஷ்ணு சகஸ்ரநாமம்!

மகாபாரதத்தில் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் இடம் பெற்றுள்ளது. இது பீஷ்மர் தர்மபுத்திரருக்கு உபதேசித்ததாகும். 150 ஸ்லோகங்களைக் கொண்ட இதில் விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் கூறப்பட்டடுள்ளன.  இந் நூலுக்கு ஆதிசங்கரர், பராசரபட்டர், ராகவேந்திரர் மூவரும் உரை எழுதியுள்ளனர். போர் முடிந்த பிறகு தர்மருக்கு பீஷ்மர் சகஸ்ரநாமத்தை உபதேசிக்கிறார். அப்போது கிருஷ்ணரும் இந்த நாமத்தைக் கேட்டு மகிழ்கிறார். பகவானைக் காட்டிலும் அவருடைய திருநாமத்திற்கு மகத்துவம் அதிகம். ஏதாவது பலன் கருதி விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்பவர்கள் ஒரு மண்டலம் செய்வர். அல்லது 24 நாட்களோ, 12 நாட்களோ படிக்கலாம். இதனால் நோய்கள் நீங்கி உடல் பலம் பெறும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !