வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி!
ADDED :4581 days ago
நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில், நேற்று, குருத்தோலை பவனி நடந்தது.இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப் படுவதற்கு முன், ஜெருசேலம் நகரை நோக்கி சென்றபோது, மக்கள், கைகளில் குருத்தோலை ஏந்தி, அவரை வரவேற்றதை, நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவ தேவாலயங்களில், குருத்தோலை பவனி நடக்கிறது.இந்நிகழ்ச்சியை முன்னிட்டு,வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு, சிறப்புக் கூட்டு பாடல் திருப்பலி, காலை, 7:00மணிக்கு, குருத்தோலை புனிதம் செய்யப்பட்டு, பங்கு பாதிரியார் ஆரோக்கிய தாஸ் தலைமையில், குருத்தோலை பவனி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.