உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முளைப்பாலிகை விழா!

முளைப்பாலிகை விழா!

காரைக்கால்:காரைக்கால் தெட்சணமுத்து மாரியம்மன் கோவிலில் முளைப்பாலிகை விழா நடந்தது.காரைக்கால் தலத்தெரு தெட்சணமுத்து மாரியம்மன், நடன காளியம்மன், பத்ரகாளியம்மன், படைபத்ர காளியம்மன் கோவில் முளைப் பாலிகைத் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.17ம் தேதி சிறுவர் காவடி, ஊர்க்காவடி,19ம் தேதி ஏகதின லட்ச்சார்சனை, 22ம் தேதி விளக்கு பூஜை நடந்தது. மறுநாள் இரவு தெட்சணமுத்து மாரியம்மன், நடனகாளியம்மன், பத்ரகாளியம்மன், படை பத்ரகாளியம்மன் முளைப்பாலிகையுடன் அரŒலாற்றில் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பெண்கள் முளைப்பாலிகையுடன் சாமி தரினசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !