உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி கோயிலில் மார்ச் 27ல் தேரோட்டம்

திருப்புல்லாணி கோயிலில் மார்ச் 27ல் தேரோட்டம்

கீழக்கரை:திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதர் பெருமாள் சுவாமி கோயிலில் பங்குனி பிரமோத்ஸவ விழா மார்ச் 10ல் கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 22ல் இரட்டை கருட சேவை, மார்ச் 24ல், ஆதி ஜெகன்னாதர் பெருமாள் சுவாமிக்கு ஜெயராமன் பட்டர் தலைமையில், விசேஷ அலங்கார திருமஞ்சனம் நடந்தது. இரவு தீபாராதனை, பிரபந்தங்கள் பாடி, சுவாமி யானை வாகனத்தில் வீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் பத்மாசனி தாயாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மங்கேற்றனர். மார்ச் 27ல் தேரோட்டம், மறுநாள் சேதுக்கரையில் தீர்த்தவாரி வழங்குதலுடன், விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !