உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றாலம் கோயிலில் சிறுவர்களுக்கு ஆன்மிக நீதி நெறி வகுப்புகள்

குற்றாலம் கோயிலில் சிறுவர்களுக்கு ஆன்மிக நீதி நெறி வகுப்புகள்

குற்றாலம்:தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறுவர் சிறுமியர்களுக்கு ஆன்மிக நீதி நெறி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இப்பயிற்சி வகுப்பில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் சிறுவர்  சிறுமியர்களை ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்க, இந்து சமய அறநிலையத்தறை ஆணைர் தனபால், அனைத்து கோயில் நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டதை தொடர்ந்து மண்டல இணை ஆணையர் அன்புமணி அறிவுரையின்பேரில் குற்றாலம் கோயிலில் ஆன்மிக நீதிநெறி வகுப்பு நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடந்தது.செயல் அலுவலர் வெங்கடேஷ், இந்து சமய அறநிலையத்துறை தென்காசி தெற்குபிரிவு ஆய்வர் ஏமையா மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். சிறுவர்  சிறுமியர்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் உபரகணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !