கரக்காண்டேஸ்வரர் கோவில் தேர் திருவிழா
ADDED :4686 days ago
நகரி: நகரி கரக்காண்டேஸ்வரர் கோவிலில் நடந்து வரும், பிரம்மோற்சவ விழாவில், நேற்று முன்தினம், தேர் திருவிழா நடந்தது.சித்தூர் மாவட்டம், நகரி டவுனில் அமைந்துள்ளது கரக்காண்டேஸ்வரர் கோவில். இந்த கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவம், கடந்த, 20ம் தேதி, கொடி ஏற்றத்துடன் துவங்கியது.விழாவை ஒட்டி, தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. உற்சவ பெருமான் தினமும், ஒரு வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது.இதையொட்டி, காலை, 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், உற்சவர் காமாட்சி சமேத கரக்காண்டேஸ்வரர்சவாமி எழுந்தருளி, மாடவீதிகளில் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.