பிள்ளையார்குப்பத்தில் செடல்தேர் உற்சவம்
கிருமாம்பாக்கம்: பிள்ளையார்குப்பம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் செடல்தேர் உற்சவம் நடந்தது.கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் சிவசுப்ரமணிய கோவில் செடல் உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் பூஜை, சக்திவேல் பூஜை, முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிவதாலங்களுடன் 108 சங்காபிஷேகம் நடந்தது. 25ம் தேதி இரவு 9 மணிக்கு சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய விழாவான செடல் தேர் உற்சவம் நேற்றுமுன்தினம் நடந்தது. 108 காவடி பூஜை, சக்திவேல் பூஜை, வலம்புரி சங்கு அபிஷேகமும் நடந்தது. விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தியும், தேர், லாரி உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். மாலை 5 மணிக்கு கோவில் எதிரில் ஆகாய ராட்டினச் செடல் உற்சவம் நடந்தது. இரவு கலக்கல் காங்கேயனின் இன்னிøŒ பட்டிமன்றம் நடந்தது. நேற்று (26ம் தேதி) காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் இரவு 8 மணிக்கு இடும்பன் பூஜையும் நடந்தது.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.