வேதபுரீஸ்வரர் கோவிலில் சலங்கை பூஜை!
ADDED :4596 days ago
புதுச்சேரி: புதுச்சேரி ரசிக மதுரா நாட்டியாலயா Œõர்பில் சலங்கை பூஜை நிகழ்ச்சி நடந்தது. காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் வரதாஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், சரவணன் அருள் நாட்டியாலா நிறுவனர் சரவணன் மற்றும் அழகு ராமசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.ரசிக மதுரா நாட்டியாலயா நிறுவனர் புனிதாவின் நட்டுவாங்கமும், சூசைராஜ் வாய்ப்பாட்டும், கோட்டயம் மது மிருதங்கமும், தந்தி கலை வேந்தர் கிருபாமுரளி வயலினும், அழகு ராமசாமி முகர்சிங்கும் இசைத்தனர்.விழாவையொட்டி, 5 மாணவர்களுக்கு சலங்கை பூஜை செய்து வைக்கப்பட்டது.