உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூரில் பங்குனி தேரோட்டம்

அன்னூரில் பங்குனி தேரோட்டம்

அன்னூர்: குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் 5ம் ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று நடந்தது. இக்கோவிலில் உள்ள வற்றாத சுனை பிரசித்தி பெற்றது. பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 23 மற்றும் 24ம் தேதி யாக வேள்வி பூஜை நடந்தது. 25ம் தேதி மாலையில் திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் சுவாமி உலா வருதலும் நடந்தது. நேற்று அதிகாலை சுவாமி தேருக்கு எழுந்தருளினார். காலை 10.10 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. தேரோட்டத்தில், காவடிக்குழு மற்றும் ஜமாப் குழுவினர் பங்கேற்றனர். பக்தர்கள் தேரின் மீது எழுமிச்சை மற்றும் பழங்களை வீசி வணங்கினர். குமாரபாளையம், ஆலாம்பாளையம், காக்காபாளையம், அன்னூர், பிள்ளையப்பம்பாளையம், கரியாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மதியம் 2.00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !