நரசிம்மருக்கு மூலிகை மந்திர ஹோமம்!
திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர் கோயில் 1200 ஆண்டுகளுக்கு முந்தியது. கஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகியோருக்காக காட்சியளித்த நரசிம்மர், பதினாறு கரங்களுடன் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார், நரசிம்மரின் நட்சத்திரமான சுவாதியன்று இங்கு 16வகை மூலிகையால் மந்திர ஹோமம் நடக்கிறது. காரியத்தடை நீங்க அருகம்புல், திருமணம் கூடி வர தேன்கலந்த மல்லிகைப்பூ, பாவநிவர்த்திக்காக துளசி, பிதுர்தோஷம் அகல எள், குழந்தை பாக்கியம் பெற அரசு சமித்து, கல்வி வளர்ச்சிக்காக பச்சை கற்பூரம், தீர்க்காயுள் பெற சீந்தில், கடன் நிவாரணம் பெற செந்தாமரை, லட்சுமி கடாட்சத்திற்கு வில்வஇலை, எதிரிகள் தொல்லை நீங்க வெண் கடுகு, நவக்கிரகதோஷம் நீங்க நாயுருவி, ரத்த சம்பந்தமான நோய் நீங்க குங்குமப்பூ, வழக்கில் வெற்றி பெற ஜடாமாம்சி, தொழில் வெற்றிக்காக வெற்றிவேர், விளாமிச்சை வேர், சர்வ தோஷ நிவர்த்திக்காக விஷ்ணுகரந்தி ஆகிய மூலிகைகள் இதில் இடம்பெறும். விஷ்ணு சூக்த ஹோமம், ஸ்ரீசூக்த ஹோமம், அபிஷேகம், அலங்காரம், நீராஞ்சனவழிபாடு, பானக நைவேத்யம், தீபாராதனையும் நடக்கும். மார்ச் மாத சுவாதி ஹோமம் 29ல் நடக்கிறது. ஹோமத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். போன்: 94423 30643.