ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம்!
ADDED :4595 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடந்தது. ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண விழா, கடந்த 19ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, தேரோட்டம், தொடர்ந்து கோட்டை தலைவாசல் ரேணுகா தேவி கோயிலில், திருக்கல்யாண பட்டு, புடவை, வேட்டி, திருமாங்கல்யம் பெறுதல் நடந்தது. மாலையில் ரெங்க மன்னார் வீதிபுறப்பாடு, பெரியாழ்வார் பூரண கும்பத்துடன் எழுந்தருளலும் நடந்தது. இரவு 7.30 மணிக்கு, ஆடிப்பூர மண்டப பந்தலில் ஆண்டாள், ரெங்கமன்னார் மாலை மாற்றுதலுடன் திருக்கல்யாணம் நடந்தது. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.