வட மாநிலங்களில் ஹோலி உற்சாக கொண்டாட்டம்!
புதுடில்லி: வசந்த காலத்துக்கு வரவேற்பு அளிக்கும், ஹோலி பண்டிகை, தலைநகர் டில்லி உட்பட, வட மாநிலங்கள் முழுவதும், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வசந்த காலத்தை வரவேற்கும் வகையில், வட மாநிலங்களில், ஆண்டு தோறும், ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தபண்டிகை, வண்ணங்களின் திருவிழாஎன்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஹோலி பண்டிகை, டில்லியில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை, ஒருவர் மீது, வண்ணப் பொடிகளை தூவியும், பல வண்ணதண்ணீரை, பீய்ச்சி அடித்தும், ஹோலி பண்டிகையை கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர், வாழ்த்துக்களையும் பறிமாறினர்.இதையொட்டி, டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மகாராஷ்டிரா, உ.பி., குஜராத், ம.பி., உட்பட, நாடு முழுவதும், ஹோலி பண்டிகை கோலாகலமாக நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், நாட்டு மக்களுக்கு, ஹோலி வாழ்த்து தெரிவித்திருந்தனர்.