காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சர்வதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி!
ADDED :4609 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் நிறைவாக, நேற்று காலை, தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா, கடந்த, 17ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று சந்திரசேகரர், வெள்ளி இடப வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளை வலம் வந்து, பகல், 12:00 மணிக்கு, சர்வ தீர்த்த குளத்தை சென்றடைந்தார். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு, 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.