உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணியில் புனித வெள்ளி வழிபாடு!

வேளாங்கண்ணியில் புனித வெள்ளி வழிபாடு!

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி தேவாலயத்தில், நேற்று மாலை நடந்த, புனித வெள்ளி இறை வழிபாடு நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகை அருகே, வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினமான நேற்று, சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, திவ்ய நற்கருணை ஆராதனை, பல்வேறு தரப்பினரால் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தேவாலய கலையரங்கில், மாலை, 6:30 மணிக்கு, பேராலய அதிபர் மைக்கேல் உள்ளிட்ட, 10 பாதிரியார்கள் தலைமையில், இறை வழிபாடு, பொது மன்றாட்டு,சிலுவை ஆராதனை நடந்தன. இதில்,ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் வாழ்த்துகள்: இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான, "ஈஸ்டர் நன்னாள், இன்று உலகெங்கும் கொண்டாடப்படுவதை ஒட்டி, "உலகமெங்கும் இயேசு ஊழியர்கள் நிறுவனரான, சுவிசேஷகர் பிரேம்குமார், கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், கூறியிருப்பதாவது: யோவான் எழுதிய சுவிசேஷம் 3:16ல், தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவர்கள் யாவரும், கெட்டுப் போகாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தின் மீது அன்பு கூர்ந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஈஸ்டர் நன்னாளில், பாவத்தையும், சாபத்தையும், மரணத்தையும், இந்த கொடிய சிலுவை மரத்தில் பலியாகி, நமக்காக வெற்றிச் சிறந்தார். இந்த இனிய ஈஸ்டர் நன்னாளில், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, உங்களுக்கு சமாதானம், சந்தோஷம், வெற்றியுள்ள வாழ்க்கை தந்தருளி, உங்களை ஆசிர்வதிப்பாராக இவ்வாறு, பிரேம்குமார் வாழ்த்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !