சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது
ADDED :4593 days ago
சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, கொடியேற்றத்துடன் நாளை (மார்ச்31)இரவு 9 மணிக்கு துவங்குகிறது சிவகாசி இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவின் போது, அம்மன் பல்வேறு அலங்காரத்தில் தினம் ரதவீதிகளில் வீதி உலா வருதல் நடக்கிறது. எட்டாம் விழாவில் பொங்கல், குதிரை வாகனத்தில் அம்மன் முப்பிடாரி அம்மன் கோயில் முன் வேட்டைக்கு செல்தல் நடைபெறுகிறது. 9ம் நாள் பக்தர்களால், அக்னி சட்டி எடுத்தல், கயர் குத்து, முடிகாணிக்கை, முத்துகாணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை ஆகிய நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. 10ம் நாள் விழாவில் தேரோட்டம், இரவில்கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.