அவலூர்பேட்டை கோவிலில் ரூ.2 லட்சம் உண்டியல் வசூல்
ADDED :4605 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் கடந்த 18 ம் தேதி பங்குனி உத்திர விழா துவங்கி, 13 நாள் நடந்தது. இதில் 27 ம் தேதி புஷ்ப ரத ஊர்வலம் , 29 ம் தேதி நடந்த தெப்பல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் காணிக்கையை செலுத்துவதற்கு வசதியாக முக்கிய இடங்களில் உண்டியல் அமைக்கப்பட்டது. கோவில் ஆய்வாளர் கோவிந்தராஜ், நிர்வாக அதிகாரி ஜெயகுமார், விழா குழு தலைவர் ஏழுமலை முன்னிலையில் நேற்று முன்தினம் உண்டியல்கள் திறந்து பணம் எண்ணும் பணி நடந்தது. இதில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 196 ரூபாய் பணமும், 4 கிராம் தங்கம் மற்றும் 123 கிராம் வெள்ளி நகைகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது, தெரிய வந்தது.