உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயில் சன்னதியில் ஏ.சி.,வசதி!

கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயில் சன்னதியில் ஏ.சி.,வசதி!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் உபயதாரர் வழங்கிய ஏ.சி., நேற்று பொருத்தப்பட்டது. கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேக திருப்பணிகளில் பெரும்பாலானவை உபயதாரர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டது. பகவதிஅம்மன் கோயிலுக்கு அடிக்கடி வரும் சென்னையை சேர்ந்த பிரதீப் என்ற பக்தர் கும்பாபிஷேகத்தில் தன்னுடைய பங்கும் இருக்கவேண்டும் என்று விரும்பிய அவர்,கும்பாபிஷேகம் முடிந்த சிலநாட்கள் கழித்து கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு, நாகர்கோவிலுக்கு சென்று 1 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு ஏ.சி.,வாங்கி கோயில் நிர்வாகத்தை அணுகி, மூலஸ்தானபகுதியில் பக்தர்கள் வசதிக்காக ஏ.சி-யை பொருத்துமாறு கூறியுள்ளார். அதற்கு கோயில் நிர்வாகம் முறையாக பதில் கூறாமல் உபயதாரரை அலைகழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தமடைந்த அந்த பக்தர் ஏ.சி.,யை கோயில் அலுவலகத்தில் வைத்து விட்டு சென்னை சென்றுவிட்டார். ஏ.சி-யும் பொருத்தப்படாமல் அலுவலகத்திலேயே இருந்தது. பக்தர் வழங்கிய ஏ.சி-யை பொருத்தாமல் இருந்தது பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோடை காலம் துவங்கிய நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் கோயிலுக்கு தரிசனம் செய்யவரும் பக்தர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதனையடுத்து பக்தர் வழங்கிய ஏ.சி., நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று பொருத்தும் பணி தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !