மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4537 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4537 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4537 days ago
நற்செயல்கள் செய்து சமூகத்தில் பெருமை பெறும் விருச்சிகராசி அன்பர்களே! புத்தாண்டில் பிரதான கிரகங்களில் சனி, ராகு ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் சிரம பலன்களைத் தர உள்ளனர். ராசிக்கு ஆறாம் இடத்தில் கேது வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும் வகையில் உள்ளார். ரிஷபத்தில் அனுகூலமாக உள்ள குரு, மே28ல், அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ஏழரைச்சனியின் பிடியிலும் இருக்கிறீர்கள். இதனால் நீங்கள் எந்த செயலிலும் முன்யோசனையுடன் ஈடுபட வேண்டும்.நீங்கள் நேர்மையாக நடந்து, உள்ளதையே பேசினாலும் கூட மற்றவர்கள் பார்வையில் அது தவறாகத்தான் தெரியும். எனவே இடம், பொருள் அறிந்து பேசுங்கள். தம்பி, தங்கைகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்குரிய அறிகுறி தெரிகிறது.வீடு, வாகன வகையில் கிடைக்கிற வசதி திருப்திகரமாக இருக்கும். தாயின் அன்பு, ஆசி கிடைத்து மனதிற்கு ஆறுதலாக இருக்கும். புத்திரர்களைக் கண்டிப்பதாக இருந்தாலும் சரி...சில விஷயங்களில் ஊக்கப்படுத்தினாலும் சரி... நிதான அணுகுமுறை வேண்டும். உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதால் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.கடன்கள் நிர்ப்பந்தம் தரும். புதிய கடன் பெற்று இவற்றை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எதிரிகளால் ஏற்படும் தொல்லையை சமயோசிதமாக சமாளிப்பீர்கள். கணவன், மனைவி குடும்பத்தின் எதிர்கால நலனை கவனத்தில் கொண்டு சகிப்புத்தன்மை, தியாக குணத்துடன் செயல்படுவர். நண்பர்களுக்கு உதவுவதிலும் அவர்களிடம் உதவி பெறுவதிலும் ஒரு அளவைக் கடைபிடிப்பது நல்லது. மூத்த சகோதரர்கள் இயன்ற உதவி,ஆலோசனை வழங்குவர். வெளியூர் பயணங்கள் தேவையில்லாமல் செல்ல வேண்டாம். பணம், நேரத்தை மிச்சப்படுத்த உள்ளூரில் இருந்தபடியே சமாளிக்கப் பாருங்கள். சுயதொழில் துவங்க முயற்சிப்பவர்கள் உரிய காலம் வரும் வரை காத்திருப்பது நல்லது. தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில், இப்போது இருக்கிற அனுகூலத்தன்மைகளை பாதுகாத்துக் கொண்டாலே போதுமானது. விரிவாக்கப்பணி முதலியவற்றை வருங்காலங்களில் பார்த்துக் கொள்ளலாம். ஆயினும், திட்டமிட்ட வளர்ச்சியை உருவாக்க அக்கறையுடன் செயல்படுவீர்கள். உற்பத்தி, தரம் சிறந்து புதிய ஒப்பந்தங்களை பெற்றுத்தரும். நிர்வாகத்தை எளிதாக நடத்த சில மாற்றங்களை செய்வீர்கள். பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்ற தாராள செலவு செய்ய வேண்டி வரும். சிலர் தொழில்சார்ந்த சங்கங்கள், அமைப்புகளில் இருக்கும் பதவியை உதற வேண்டிய நிலை ஏற்படும். வியாபாரிகள்: வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கினால் மட்டுமே இருக்கிற விற்பனையைத் தக்க வைக்க முடியும். அபிவிருத்தி பணிகளை நிறைவேற்ற எதிர்பார்த்த பணம் ஓரளவு கிடைக்கும். சந்தையில் அதிகரிக்கும் போட்டியை சமாளிக்க இனிய பேச்சு, எளிய அணுகுமுறை என இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சரக்கு குடோன்களில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது அவசியம். பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணிகளை மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அதிகாரிகளின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும்.சக பணியாளர்களுடன், விட்டுக்கொடுத்து செல்வதால் மட்டுமே குளறுபடி இல்லாமல் நன்மை பெற இயலும். சலுகைகள் பெறுவதிலும், பதவி உயர்வுக்கு தகுதி பெற்றவர்களும் உயரதிகாரிகளிடம் நிதானமாக முயற்சித்தால் மட்டுமே நினைத்தது நடக்கும். பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு தாறுமாறாக அதிகரிக்கும். இதனால், பணியில் குளறுபடி ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கு இடம் தராமல், அதிகநேரம் பணிபுரிந்தாவது பிரச்னைகளைத் தவிர்க்க முயற்சியுங்கள். தேவையில்லாமல் நிர்வாகத்தின் கண்டிப்பை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் வரலாம். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். குடும்பப் பெண்கள் அத்தியாவசிய செலவுகளில் சிக்கனம் பின்பற்ற வேண்டியிருக்கும். சிலருக்கு ஆபரணம் வாங்க யோகம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் அமையும். ஓரளவு லாபம் கிடைக்கும். மாணவர்கள்: ஞாபகத்திறன் குறையும். கூடுதல் முயற்சியும் தகுந்த பயிற்சி முறைகளும் பின்பற்றுவது அவசியம். படிப்புக்கான பணவசதி எதிர்பார்த்தபடி கிடைக்கும். சக மாணவர்களின் உதவியும் உண்டு. பெற்றோரின் ஆலோசனை, வழிகாட்டுதலை மதித்து நடந்துகொள்வதால் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். படித்து முடித்து வேலை வாய்ப்புக்காக முயற்சிப்பவர்களுக்கு ஓரளவு அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகள்: சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாத்துக் கொள்வதில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்க நண்பர்கள் உதவுவர். உங்களின் அரசியல் பணிக்கு உதவுவதில் புத்திரர் ஓரளவு உதவுவர். விவசாயிகள்: இடுபொருட்கள், பணவசதி கிடைப்பதில் தாமத சூழ்நிலை இருக்கும். கூடுதல் முயற்சியினால் நிலைமையைச் சமாளித்து உற்பத்தி அளவை சுமாரான நிலைக்கு கொண்டு வருவீர்கள். கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் கிடைத்து முக்கிய செலவுகளுக்கு பயன்படும். நிலம் தொடர்பான சிரமம் இருந்தால் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை சிக்கன பணச்செலவில் நடத்துவது நல்லது. செல்ல வேண்டிய கோயில்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் பரிகாரம்: சிவனை வழிபடுவதால் உடல்நலமும் பணவரவும் சீராகும் பரிகார பாடல்: காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதுநாதன் நாமம் நமசிவாயவே!
4537 days ago
4537 days ago
4537 days ago