பழநி கோயில் ரூ. ஒரு கோடியே 57 லட்சம் வசூல்!
ADDED :4602 days ago
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழா உண்டியல் வசூல் , ஒரு கோடியே 57 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. ரொக்கமாக ஒரு கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 865 ரூபாயும். தங்கம் 558 கிராம். வெள்ளி 4 ஆயிரத்து 710 கிராம். வெளிநாட்டு கரன்சிகள் 815 கிடைத்துள்ளது. இது 16 நாட்களில் கிடைத்ததாகும். வேல், செயின், வளையல், முருகனின் உருவம் பொறிக்கப்பட்ட தகடு, மோதிரம், நாணயம், திருமாங்கல்யம், ஆள் ரூபம், வெள்ளியாலான காவடி, வேல், பாதம், கொலுசு, வீடு, குண்டு போன்றவையும் பக்தர்கள், காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்றும், நாளையும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது. பழநி கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் ராஜமாணிக்கம் உடனிருந்தனர்.