உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் கோவிலில் ஏகாதச மகா ருத்ர ஹோமம்

ரிஷிவந்தியம் கோவிலில் ஏகாதச மகா ருத்ர ஹோமம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி ஏகாதச மகா ருத்ர ஹோமம் நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மூலவர் சன்னிதியில் உலக ஒற்றுமை மற்றும் நன்மை, குடும்ப ஷேமம், கல்வி உயர்வுக்காக ஏகாதச மகா ருத்ரஹோமம் நேற்று நடந்தது. காலை யில் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு 11 வகை திரவியங்கள் கொண்டு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு தேனபிஷேகமும் நடந்தது. தைத்தொடர்ந்து கலசங்கள் அலங்கரிக்கப்பட்டு நந்தி வாகனத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நாகராஜ், சோமு குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் 11 முறை ருத்ர பாராயண ஹோமம் செய்வித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !