உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலவிளக்கம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழா

குலவிளக்கம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழா

ஈரோடு: ஈரோடு மாவட்டம் காளமங்கலம் குலவிளக்கம்மன் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா, ஏப்ரல், 11ம் தேதி நடக்கிறது. ஈரோடு மாவட்டம் நஞ்சைகாளமங்கலம் குலவிளக்கம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழா, ஏப்ரல், 2ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று மாலை, 4 மணிக்கு நல்லாத்தாள் சுசுவாமி வழிபாடு நடந்தது. இன்று மாலை, 4 மணிக்கு கருப்பண்ண ஸ்சுவாமி வழிபாடும், நாளை மாலை, 4 மணிக்கு மத்தியபுரீஸ்வரர் வழிபாடும் நடக்கிறது. ஏப்ரல், 6ம் தேதி மாலை, 4 மணிக்கு வரதராஜ பெருமாள் வழிபாடும், 7ம் தேதி இரவு, 12 மணிக்கு, கிராம சாந்தியும் நடக்கிறது.
ஏப்ரல், 8ம் தேதி இரவு, 11 மணிக்கு கேடயம், 9ம் தேதி முப்பாட்டு மாவிளக்கு, 10ம் தேதி அம்பாள் குதிரை வாகனத்தில் முன்னோட்டம், பின்னோட்டம் நடக்கிறது. ஏப்ரல், 11ம் தேதி காலை, 9.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் பங்கேற்று, தேரை வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். ஏப்ரல், 12ம் தேதி இரவு, 11 மணிக்கு சத்தாவர்ணம், 13ம் தேதி காலை, 5 மணிக்கு ஸ்சுவாமி ஆலயம் குடிபுகுதல் நடக்கிறது. செயல் அலுவலர் பரமசிவன், விழாக்குழு கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !