அழகர் ஆற்றில் இறங்குமிடம் தூய்மைப்படுத்தப்படுமா?
ADDED :4570 days ago
மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தை, தற்போது பாயும் சாக்கடைகளை அகற்றி, தூய்மைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இதுகுறித்து இந்து ஆலய பாதுகாப்பு குழு பொது செயலாளர் சுந்தரவடிவேல் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது: மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக குடிநீர் வினியோகம், நடமாடும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கோயில் கொடியேற்றம் முதல் தொடர்ந்து 10 நாட்கள் மதுரையில் மின்தடை செய்யக் கூடாது.கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் தற்போது சாக்கடைகளை கலக்கின்றன. அதை அகற்றி, துப்பரவு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்றனர்.