பங்குனி அமாவாசை; பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் தர்பணம் செய்து வழிபாடு
ADDED :194 days ago
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.தங்கள் முன்னோர்களின் ஆசி வேண்டி அவர்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை வைத்து வழிபட்டனர். நிறைவாக காகங்களுக்கு படையல் செய்தனர். நிறைவாக பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்தனர்.இதில் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.