மகாதேவிமங்கலத்தில் தேர் வெள்ளோட்டம்
ADDED :4625 days ago
செஞ்சி:மகாதேவி மங்கலம் பிடாரியம்மன், மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. செஞ்சி தாலுகா மகாதேவி மங்கலம் கிராமத்தில் உள்ள பிடாரியம்மன், மாரியம்மன் கோவிலில் பல ஆண்டுகளாக தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். இதற்கான பழைய தேர் பலவீனமடைந்துள்ளது. இதனால் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 21 அடி உயரத்தில் புதிய தேர் செய்துள்ளனர். இத்தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு முற்பகல் 11 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோபூஜை, பூர்ணாஹீதி ஆகியன நடந்தது. தொடர்ந்து புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் வடம் பிடித்தனர்.