யதோக்தகாரி பெருமாள் கோவிலில் தொட்டி திருமஞ்சனம் கோலாகலம்!
ADDED :4921 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நேற்று காலை தொட்டி திருமஞ்சனம், வெகு விமரிசையாக நடந்தது.யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவம், கடந்த, 2ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலை மற்றும் மாலை, வெவ்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் காலை, தேரோட்டம் நடந்தது.நேற்று பகல், 2:00 மணிக்கு, தொட்டித் திருமஞ்சனம் நடந்தது. அதன்பின் ஸ்ரீதேவி பூதேவியுடன், பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாலை குதிரை வாகன உற்சவம் நடந்தது.இன்று காலை, 6:00 மணிக்கு, ஆள்மேல் பல்லக்கு உற்சவம், தீர்த்தவாரி, மாலை, 6:00 மணிக்கு, வேதசார விமானம், திருமொழி சாற்றுமுறை நடைபெற உள்ளது.