விருதுநகர் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!
ADDED :4663 days ago
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன், வெயிலுகந்தம்மன் கோயில் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. விநாயகர் தேர் முன்பாகவும், தொடர்ச்சியாக மாரியம்மன், வெயிலுகந்தம்மன் எழுந்தருளிய தேர் வந்தது. இதை கோவில் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். தேரானது தேசபந்து மைதானத்தில் தொடங்கி, மெயின் பஜார் வழியாக தெற்கு ரத வீதியில் வந்து நின்றது. அங்கு பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தேர் இழுக்கும் பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. விருதுநகர் மட்டுமன்றி சுற்று பகுதி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேரானது, கிளம்பிய இடத்திற்கே இன்று காலை வந்து சேரும்.