உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூரில் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்!

மேல்மலையனூரில் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்!

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கலந்து கொண்டனர். அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை யொட்டி காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்காப்பு அலங்காரம் நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !