பங்குனி அமாவாசை உற்சவம்
ADDED :4664 days ago
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், கோவில் பணியாளர்கள் சார்பில், பங்குனி அமாவாசை உற்சவம் நடந்தது. இக்கோவில் பணியாளர்கள் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அமாவாசை உற்சவம் நடைபெறும். வழக்கம்போல், இந்த ஆண்டு பணியாளர்கள் உற்சவம், நேற்றுமுன்தினம் நடந்தது. உற்சவத்தையொட்டி, கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடந்தன. ஆதிகேசவபெருமாள் மற்றும் ராமானுஜர் உற்சவ மூர்த்திகள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். மாலை, மங்கல வாத்திய இசை முழங்க, மாடவீதி புறப்பாடு நடந்தது. ஆதிகேசவபெருமாருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.