உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடாஜலபதி கோயிலில் திருவிளக்கு பூஜை

வெங்கடாஜலபதி கோயிலில் திருவிளக்கு பூஜை

சாத்தூர்: சாத்தூர் வெங்கடாஜலபதி கோயிலில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு திருவிளக்குபூஜை நடந்தது. தமிழ் புத்தாண்டு அதிகாலையில் வெங்கடாசலபதி, தாயார், ஆண்டாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 7 மணிக்கு நடந்த சிறப்பு திருவிளக்கு பூஜையில் ஜோதிடர் சேவியர் பேசினார். இதன் பின்னர் இரவு 8.30 மணியளவில் பெரியகருடாழ்வார் வாகனத்தில் வெங்கடாஜலபதி சித்திரை திருவீதியுலா நடந்தது. கோயில் செயல் அலுவலர் சுவர்ணாம்பாள், மற்றும் அலுவலர்கள், ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !