நெல்லை ஜங்ஷன் உலகாம்பிகை அம்பாள் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :4657 days ago
திருநெல்வேலி: நெல்லை உலகாம்பிகை, ஸ்ரீ புதுஅம்மன் மற்றும் சியாமளா தேவி அம்மன் கோயில்களில் திருவிளக்கு பூஜை நடந்தது. சித்திரை வருஷப்பிறப்பை முன்னிட்டு நெல்லை ஜங்ஷன் கைலாசநாத சுவாமி, சவுந்தரவல்லி அம்பாள் கோயில் பக்தர் பேரவை சார்பில் 6வது ஆண்டு திருவிளக்கு பூஜை வழிபாடு நெல்லை மீனாட்சிபுரம் உலகாம்பிகை அம்மன் கோயிலில் நடந்தது. பூஜையில் உலக நன்மைக்காகவும், சுபிட்சம் பெறவும் வேண்டி பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.