பழநி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்
ADDED :4916 days ago
பழநி:பழநி லட்சுமி நாராயணபெருமாள் கோயில், சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. பழநி கோயிலின் உபகோயில்களில் ஒன்றான, லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா, சித்ரா பவுர்ணமி விழா, ஏப்.17(இன்று) துவங்கி முதல் ஏப்.26 வரை, நடக்கிறது. இன்று காலை 6.45 மணிக்கு மேல் 7.15மணிக்குள் கொடியேற்றத்தை முன்னிட்டு, லட்சுமி நாராயண பெருமாளுக்கு விஷேச அபிஷேகம், பூஜை, கொடிப் பட்டத்திற்கு தீபாராதனை நடக்கிறது. விழாவின் ஏழாம் நாள் ஏப்.23 இரவு 7.45 மணிக்கு மேல் 8.45 திருக்கல்யாணமும், ஏப்.25ல் தேரோட்டமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன், துணைக்கமிஷனர் ராஜமாணிக்கம் செய்து வருகின்றனர்.