மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4523 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4523 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4523 days ago
நவீன கட்டடங்கள், நீண்ட, அகலமான சாலைகள், பெரிய பாலங்கள் தான் ஒரு நாட்டிற்கு அழகு என நினைத்தால் அது தவறு. சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு இவற்றுக்காக வருவதில்லை. உண்மையில் நம் நாட்டுக்கு அழகு சேர்ப்பது அதன் பழங்கால சின்னங்கள், இயற்கை எழில் மிகுந்த இடங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவையே. ஆனால் நமது அக்கறையின்மையால், பழங்கால சின்னங்கள் பெருமையை இழந்து வருகிறது. 1972ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்களை பாதுகாப்பது குறித்தான மாநாட்டில், உலக பாரம்பரிய நாள் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகல ஆண்டுதோறும் ஏப்., 18ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்தது. உலகில் எத்தனை: உலகில் சிறந்த கலாச்சாரம் மற்றும் இயற்கை பாரம்பரியம் கொண்ட "மரபுரிமை சின்னங்களை யுனெஸ்கோ அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. உலகம் முழுவதும் 936 இடங்கள் , பண்பாட்டு சின்னங்களாக, இந்த அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் 725 கலாச்சார இடங்களாகவும், 183 இயற்கை பாரம்பரிய இடங்களாகவும், 28 இடங்கள் இரண்டும் சேர்ந்தவையாக உள்ளன. உலகில் அதிக பாரம்பரிய சின்னங்கள் கொண்ட ஏழாவது நாடாக இந்தியா உள்ளது. உலகின் மரபுரிமை சின்னங்களில் 36 இடங்கள், அழியும் நிலையில் உள்ளன. இந்தியாவில் எத்தனை: இந்தியாவில் தாஜ்மகால், பதேப்பூர் சிக்ரி, குதுப் மினார் போன்ற 28 இடங்கள் உலகின் மரபுரிமை சின்னங்களின் பட்டியலில் உள்ளன. இதில் 23 இடங்கள் பண்பாட்டு சின்னங்களாகவும், 5 இடங்கள் இயற்கை பாரம்பரிய இடங்களாகவும் உள்ளன. இப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த நீலகிரி மலை ரயில், மாமல்லபுரம் சிற்பங்கள், சோழர் கோயில்கள், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவை இடம் பெற்றுள்ளன. பாரமரிப்பு குறைவு: இந்தியாவில் உள்ள மரபுரிமை சின்னங்களை, மற்ற நாடுகளில் உள்ள மரபுரிமை சின்னங்களுடன் ஒப்பிடும் போது, இவை மிகவும் மோசமாக பராமரிக்கப்படுகின்றன என்பதே உண்மை. சில இடங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக சேதத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ போன்ற அமைப்புகள், நிதியுதவி செய்து வருகின்றன. வரும் தலைமுறையினர் நாட்டின் வரலாற்று பெருமைகளை அறிந்து கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு அதிகமான நிதியை ஒதுக்கி நாட்டின் மிகப்பெரிய அடையாளமாக திகழும், மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும். நாமும் நம்மால் முடிந்த பங்களிப்பை அளிக்க வேண்டும்.
4523 days ago
4523 days ago
4523 days ago