யோகபைரவருக்கு ஜெயந்தன் பூஜை
ADDED :4569 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரக்கு ஜெயந்தன் பூஜை நடந்தது. சித்திரை முதல் வெள்ளியன்று ஜெயந்தன் பைரவரை தரிசித்த நாளை, பக்தர்கள் ஜெயந்தன் பூஜை விழாவாகக் கொண்டாடுகின்றனர்.நேற்று காலை உற்சவர் வெள்ளிக்குதிரை வாகனத்தில் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பகல் 11 மணிக்கு அஷ்டபைரவர் யாகம், புனித நீரால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் ருத்ர அலங்காரத்தில், சொர்ண அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் பைரவர் சன்னதியில் மாவிளக்கேற்றி வழிபட்டனர்.இரவில் குதிரை வாகனத்தில் பைரவர் திருவீதி உலா நடந்தது. ஆண்டிற்கு ஒரு முறை,ஜெயந்தன் விழாவிற்கு மட்டுமே, பைரவருக்கு சொர்ண அங்கி அணிவிப்பதும், திருவீதி உலாவும் நடைபெறும்.