உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் மன்றத்தில் சித்திரை மாத பூச விழா

வள்ளலார் மன்றத்தில் சித்திரை மாத பூச விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் சித்திரை மாத பூச விழா நடந்தது. மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள் முத்துகருப்பன், நாராயணன், பாலு முன்னிலை வகித்தனர். மன்ற துணை தலைவர் வைத்திலிங்கம் வரவேற்றார். மன்ற பூசகர்கள் தமிழ்மணி அடிகள், சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்து உலக நலனிற்காக பிரார்த்திக்கப்பட்டது. உழவார திருக்கூட தலைவர் ஆலத்தூர் சின்னதம்பி, ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை செயலாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !