மழை பெய்ய வேண்டி வருண மஹா யாகம்
ADDED :4566 days ago
ராசிபுரம்: ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவிலுக்கு உட்பட்ட அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி விழாவையெட்டி, சீதா ராம திருக்கல்யாண வைபவம் மற்றும் மழை வேண்டி சிறப்பு வருண யாகம் நடந்தது.முன்னதாக, பரிவார உற்சவ மூர்த்திகளுக்கு, திருமஞ்சன பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு, மூலவர் மஹா திருமஞ்சனம, சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, 9 மணிக்கு, ராமர்-சீதா திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. மேலும், மழைவேண்டி, சிறப்பு வருண மஹாயாகமும் நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஆண்டாள் அருளிய பாசுரம் பாடி மழை வேண்டிசிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதேபோல், அனைவரும் நலமுடன் வாழ சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையும் நடந்தது.