உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருள்மிகு ரகுநாத்ஜி திருக்கோயில், ஜம்மு காஷ்மீர்

அருள்மிகு ரகுநாத்ஜி திருக்கோயில், ஜம்மு காஷ்மீர்

மூலவர் தசரத ராமன், சீதா பிராட்டியார் இளவல் இலக்குமணன் ஆகியோருடன் ரதத்தில் எழுந்தருளி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார், ராமர் சிலை மட்டும் கருமை நிறக் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும் கருவறையின் மூன்று உட்புறச் சுவர்களும் தங்கப்பாளத்தால் வேயப்பட்டு ஒளியில் பளபளக்கிறது. உற்சவர் ரகுகுலத் தோன்றல் மிகச் சிறிய வடிவில் ரத்தின கிரீடம் அணிந்து சர்வ அலங்காரத்துடன் அழகுற அருள்பாலிக்கிறார். இவர் அயோத்திலிருந்து எடுத்துவரப்பட்டவர் என்று கூறுகின்றனர்.

முகவரி: அருள்மிகு ரகுநாத்ஜி திருக்கோயில்
ஜம்மு காஷ்மீர்

இருப்பிடம்: ஜம்மு காஷ்மீர் மையப்பகுதியில் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !