காமாட்சி அம்மன் கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை
ADDED :4654 days ago
உடுமலை: உடுமலை காமாட்சி அம்மன் கோவிலில், புதுப்பிக்கப்பட்ட கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.உடுமலை நேருவீதி காமாட்சி அம்மன் கோவிலில்,கொடி மரம் புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இப்பணிகள் நிறைவடைந்ததால், புதுப்பிக்கப்பட்ட கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.