நல்லாத்தூர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :4568 days ago
நெட்டப்பாக்கம் : நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. ஏம்பலம் நல்லாத்தூரிலுள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், சீதா திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு ராமர்-சீதை திருமணக் கோலத்தில் சன்னதி புறப்பாடு, அலங்கார மண்டபத்தில் ஒய்யாளி சேவை, 7 மணிக்கு கோவில் பட்டாச்சாரியர்களால் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு, ஜனக மகாராஜாவின் சீதனமாக வஸ்திரங்கள், பழவகை வரிசை தட்டுகள் சமர்ப்பிக்கப்பட்ட பின், மாங்கல்ய தாரணம், வாரணமாயிரம் வாசித்தல், சீர்பாடல், ஆசீர்வாதம், அர்ச்சனை, தாம்பூலம், தீர்த்தப் பிரசாதம் ஆகியவை நடந்தது.