பழநி பெருமாள் கோயில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம்
ADDED :4631 days ago
பழநி: பழநி லட்சுமி நாராயணபெருமாள் கோயில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. பழநி கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த, லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா, சித்ரா பவுர்ணமி விழா, ஏப்.17ல் துவங்கி முதல் ஏப்.26 வரை, நடக்கிறது. விழாவின் ஏழாம் நாள்(இன்று) ஏப்.23 இரவு 7.45 மணிக்கு மேல் 8.45 திருக்கல்யாணமும், ஏப்.25ல் (நாளை மறுநாள்) தேரோட்டமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன், துணைக்கமிஷனர் ராஜமாணிக்கம் செய்து வருகின்றனர்.