தையூர் வேம்பியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4584 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா தையூர் வேம்பியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 20ம் தேதி நிலத்தேவர் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு, காப்பு அணிவித்தல், வேள்வி பூஜைகள் நடந்தன. 21ம் தேதி திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், வேள்வி பூஜைகள் நடந்தன. நேற்று காலை நான்காம் கால வேள்வி பூஜை, வேள்வி நிறைவு நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து விமான கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு, மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஏழுமலை, வழக்கறிஞர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடி பழனிவேல், ஊராட்சி தலைவர் முனியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.