காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் மகா ரதோற்சவம் கோலாகலம்
ADDED :4560 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், மகாரதோற்சவம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், சித்திரை உத்திரப் பெருவிழா, கடந்த 18ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலை மற்றும் மாலை, வெவ்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 9:15 மணிக்கு, மகா ரதத்தில் சுந்திராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் எழுந்தருளி, ராஜவீதிகளை வலம் வந்து, 11:00 மணி அளவில் கோவிலை வந்தடைந்தார். இன்று மாலை 5:00 மணிக்கு பிக்ஷõடனர் உற்சவமும், இரவு குதிரை வாகன உலாவும் நடைபெற உள்ளது.