ஆதிகேசவப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கோலாகலம்
ADDED :4561 days ago
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறும். இவ்வாண்டு பிரம்மோற்சவத்தையொட்டி, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆதிகேசவப்பெருமாள் மற்றும் கூரத்தாழ்வார் கேடய வாகனத்தில் எழுந்தருளி, ராஜ வீதியை வலம் வந்தார். ஆதிகேசவப்பெருமாள் மற்றும் ராமானுஜர் உற்சவ மூர்த்திகள் கொடி மரத்தின் முன் எழுந்தருளினர். காலை 9:15 மணிக்கு, மங்கள வாத்தியம் ஒலிக்க, அதிர்வேட்டு முழங்க கொடியேற்றும் உற்சவம் கோலாகலமாக துவங்கியது. இன்று சேஷவாகனமும், மாலை ஹம்சவாகன உற்சவமும் நடைபெறும்.