உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் தோட்ட உற்சவம்

வரதராஜ பெருமாள் கோவிலில் தோட்ட உற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், நாளை (27ம் தேதி), தோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. உற்சவத்தையொட்டி, நாளை காலை, 5:00 மணிக்கு, வரதராஜப் பெருமாள் தங்க பல்லக்கில், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், அம்மங்காரத் தெருவில் உள்ள தோட்டத்தில் எழுந்தருளுவார். பகல், 1:30 மணிக்கு, திருமஞ்சனம் மாலை, 6:30 மணிக்கு, பத்தி உலாத்தல் (தோட்டத்தை வலம் வருதல்) இரவு, 7:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெறும். 28ம் தேதி அதிகாலை, சுவாமி, தோட்டத்தில் இருந்து புறப்பட்டு, கோவிலை வந்தடைவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !