உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் கருடசேவை

அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் கருடசேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், இன்று காலை கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளது. சின்னகாஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் அருகே, அஷ்டபுஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவம், நேற்றுமுன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை சப்பரம், இரவு சிம்ம வாகனம் உற்சவம் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை ஹம்ஸ வாகனம், இரவு சூர்ய பிரபை உற்சவம் நடந்தது. மூன்றாம் நாளான இன்று கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளது. காலை 6:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில், பெருமாள் எழுந்தருளி, மாட வீதிகளை வலம் வருவார். பின் டி.கே.நம்பித் தெரு, செட்டித் தெரு வழியாக, வரதராஜப் பெருமாள் கோவில் மாட வீதிகளை வலம் வந்து, மீண்டும் கோவிலை வந்தடைவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !