காமாட்சி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4573 days ago
வெங்கல்: வெங்கல் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்பாள், உடனுறை பிச்சாண்டீஸ்வரர் கோவில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த, 23ம் தேதி காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜையும், மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், முதல் கால யாக பூஜை நடந்தது. மறுநாள், 24ம் தேதி இரண்டாம் கால யாக பூஜையும், தீபாராதனையும், மாலை ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. தொடர்ந்து மூன்றாம் கால யாக பூஜையும், மகா பூர்ணா ஹுதியும் நடந்தது. தொடர்ந்து, காமாட்சி அம்பாள் உடனுறை, பிச்சாண்டீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மகா அபிஷேகம் நடந்தது. இரவு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், பஞ்சமூர்த்தி திருவீதி உலாவும் நடந்தன.