உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகினி அலங்காரத்தில் ஆதிகேசவ பெருமாள்!

மோகினி அலங்காரத்தில் ஆதிகேசவ பெருமாள்!

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், நேற்று காலை மோகினி அலங்காரத்தில், தங்கபல்லக்கில் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளினார். ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 24ம் தேதி முதல், கொடிஏற்றத்துடன் துவங்கி, அன்று முதல், காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில், அதிகேசவப் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வருகிறார். நேற்று காலை, மோகினி அலங்காரம், தங்கபல்லக்கில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், ஆதிகேசவப்பெருமாள் எழுந்தருளி, தேரடி, காந்தி ரோடு, செட்டி தெரு, திருமங்கையாழ்வார் தெரு வழியாக வீதி உலா வந்தார். இன்று காலை ‹ர்ணாபிஷேகமும், மாலை யானை வாகனத்திலும், ஆதிகேசவப்பெருமாள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !