பெற்றோர்க்கு பாத பூஜை
ADDED :4554 days ago
புதுச்சேரி: புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள சத்ய சாயிபாபா நகர சமீதியில் மாத்ரு பூஜை நடந்தது. நகரப் பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்று, தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர். பெற்றோரை மதித்தும், அவர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும் என்ற சத்ய சாயிபாபாவின் போதனைகளை வலியுறுத்தி இந்த பாத பூஜை நடந்தது.நிகழ்ச்சியில் சத்ய சாயிபாபா சமிதி மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் நீலா, நகர சமிதி ஒருங்கிணைப்பாளர் திருப்பாவை மற்றும் வித்யா, உமா, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.