பத்ரகாளியம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED :4675 days ago
சாத்தூர்: சாத்தூர் இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட, பத்திரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா,கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் கொடியேற்றத்தை முன்னிட்டு ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி இரவு 7மணிக்கு நடந்தது. அம்மனுக்கு பால், பன்னீர், இளநீரால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து திருவிழா கொடியேற்றம் நடந்தது. பொங்கல் விழா வரும் மே 7ல் நடைபெறவுள்ளது. கொடியேற்றத்தை தொடர்ந்து முக்கியவீதிகள் வழியாக அம்மன் வீதியுலா நடந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சாத்தூர் இந்து நாடார்கள் உறவின் முறை கமிட்டி நிர்வாகிகள் செய்துள்ளனர்.