திருப்பதி ஏழுமலையானுக்கு புதிய தங்கரதம்!
ADDED :4573 days ago
நகரி: திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாளின், ரத உற்சவ சேவைக்கு, புதிதாக தங்க ரதம் தயார் செய்யப்படுகிறது என, திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜு கூறினார். திருமலையில், நேற்று அவர் கூறுகையில் தங்க ரதம் தயார் செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஜூலை இறுதிக்குள், இந்த பணிகள் நிறைவடையும். பணி தாமதமானால், ஆகஸ்ட், 15ம் தேதிக்குள் முடிவடையும். தற்போது உள்ள தங்க ரதத்தை விட, மிக அழகாக, புதிய ரதம் தயார் செய்யப்படுகிறது, என்றார்.